ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - தனுசு
மனதில் பட்டதை தயங்காமல் வெளிபடுத்தும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு அட்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்று லாபாதிபதி சுக்கிரனுடன் இணைவு பெறுவது எதிர்பாராத வகையில் திடீர் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். எதை செய்தாலும் அதற்கு தகுந்த காரணம் கண்டுபிடிப்பீர்கள். சிறு விடயத்தை கூட ஆராய்ச்சி செய்வீர்கள். மனதில் என்ன தோன்றுகிறதோ அதை உடனே செயல்படுத்த வேண்டுமென்று எண்ணுவீர்கள். அர்த்தாஷ்ட சனி குரு பார்வை பெறுவதால் பெரிய பாதிப்பை தராது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள்.
ராசியில் சந்திரன் அமர்ந்து சூரியனையும், புதனையும் பார்வை இடுவதால் செய்யும் செயலில் நுணுக்கமான அனுபவம் இருக்கும். தெளிவான பேச்சும், செயலும் உங்களை பக்குவபடுத்தி காரியத்தை செயல்பட செய்யும். மூன்றில் ராகு அமர்வது மனதில் தைரியமும் காரிய அனுகூலமும் உண்டாகும். சரியான முடிவு எடுப்பது தாமதமின்றி செயல்படுவது நன்மையாக அமையும். அர்த்தாஷ்டம சனி இருந்தாலும் குரு பார்வை பெறுவது.
உங்களின் உடல்நலனில் எந்த பாதிப்பையும் தராது. தாயார் உடல்நலன் மேன்மை அடையும் சிறு வியாதிகள் கூட விரைவில் குணம் அடையும். வசதிகளை பெறும் வகையில் உங்களின் செயல்பாடு அமையும். பஞ்சமாதிபதி செவ்வாய் ஆறில் அமர்வது உங்களின் எதிரிகளில் பலகீனம் உங்களின் பலமாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவீர்கள். உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். செய்யும் தொழிலில் தடைகள் நீங்கி சில நேரம் பழைய தொழிலை செய்ய முயற்சி எடுப்பீர்கள். உங்களின் யோகாதிபதியான சூரியன் பார்வை ராசிக்கு இருப்பது தொழிலில் முன்னேற்றம் அமைய வாய்ப்பு அமையும்.
அரசியலிலும், பொது வாழ்விலும் ஆர்வம் கொண்டு இனி செயல்படுவீர்கள். அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள். பிறருக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்துவீர்கள். புத்தியுள்ளவன் பலவான் ஆவான் என்பது போல சமயத்திற்கு தகுந்தபடி செயல்களில் வேகம் காட்டுவீர்கள். புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். அட்டம ஸ்தானத்தில் ராசிநாதன் குரு அமர்ந்து தன ஸ்தானத்தை பார்வை இடுவது வரவுக்கு வழிவகுக்கும். சொந்த முயற்சியால் நல்ல முன்னேற்றம் கொண்டு செயல்படுவீர்கள்.
சுக்கிரன் பார்வை தன ஸ்தானத்தில் அமைவதால்.. கொண்ட கொள்கையை விட்டு கொடுக்காமல் செய்யும் செயலில் நேர்மையுடன் எடுத்த காரியத்தை மேலோங்கி செயல்படுவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் கேது அமர்ந்து யோகாதிபதி சூரியனை பார்ப்பது முன்னேற்ற பாதையில் செல்வதற்கு உறுதுணையாக அமையும். கலைத்துறையினருக்கு சிறு உதவிகள் கிடைக்கும். நல்ல நிகழ்ச்சிக்கு சென்று வருவீர்கள். பொருளாதார சூழ்நிலைக்கு தகுந்தபடி உங்களில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை பாதுகாப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, சிவப்பு,
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
14-07-2026 செவ்வாய் இரவு 08.43 முதல் 16-07-2026 வியாழன் இரவு 12.03 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை தட்சணாமூர்த்தி வழிபாடு செய்து மஞ்சள் பூ வைத்து நெய் தீபம் ஏற்றி எலுமிச்சை சாதம் வைத்து வேண்டி கொள்ள தடைபட்ட பணவரவு சீக்கிரம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
















