அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - தனுசு
தனக்கென்று கொள்கையோடு வாழ்ந்து காட்டும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் எட்டாமிடத்தில் உச்சம் பெற்று தன ஸ்தானத்தை பார்வை இடுவதும் பஞ்சமாதிபதி செவ்வாய் தனஸ்தானத்தை பார்வை இடுவதும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் சூழ்நிலை அமையும். இம்மாத இறுதியில் நல்ல தொழில் முன்னேற்றமும், பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். அர்த்தாஷ்டம சனி பலமிழந்து காண்பதால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது.
உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் ராகு அமர்ந்து ராசியை பார்வை இடுவது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை பெற்று தருவார். விவசாயம், அன்றாடம் அழியும் உணவு பொருட்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். இனி அர்த்தாஷ்டம சனியினால் உடல் உபாதைகளின் பாதிப்பு குறையும் வாகன தடைகள், வீடு கட்ட சில தடைகள் விலகி, மீண்டும் வேலையை துவங்குவீர்கள்.
எட்டாமிட அதிபதி ஆறில் அமர்வது மறைமுகமான சில காரிய நன்மையை தரும். பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். வங்கி கடன் பெற்று சிலர் கூடுதல் வட்டியை குறைத்து கொள்வீர்கள். பனிரெண்டுக்குரிய செவ்வாய் எட்டினில் மறைவு பெறுவது தொழில் வாய்ப்பு. விளையாட்டுத் துறையில் நீங்கள் எதிர்பாராத வளர்ச்சியையும் வெற்றி வாய்ப்பையும் பெறுவீர்கள்.
ராசிநாதன் குரு எட்டாமிடத்தில் உச்சம் பெற்றாலும் உங்களுக்கு பார்க்குமிடம் சிறப்பான பலனை தருவார். யோகாதிபதி சூரியன் வீட்டில் கேது உங்களுக்கு நல்ல தொழிலையும் வேலை வாய்ப்பையும் பெற்று தரும். சூரியன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சனியை சப்தமான பார்வையும் அமைவது சிலருக்கு அரசு துறையில் வேலை கிடைக்கும். லாபஸ்தானத்தில் புதனுடன் சுக்கிரன் இணைவு உங்களுக்கு எல்லாம் வெற்றியே தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
04-10-2026 ஞாயிறு இரவு 08.57 முதல் 06-10-2026 செவ்வாய் இரவு 11.55 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பொடி மீது ஐந்து நெய் தீபமேற்றி மஞ்சள் நிற துணி சாற்றி கொண்டை கடலை வைத்து வேண்டிக் கொள்ள எல்லா காரியமும் வெற்றியை தரும்.
















