அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - கன்னி

அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - கன்னி

அறிவாற்றலும். மனவலிமையும் கொண்டு விளங்கும் கன்னி ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் தனஸ்தானத்தில் தனாதிபதி சுக்கிரனுடன் இணைந்த இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு மேன்மை உண்டாகும். பாக்கியாதிபதி வீட்டில் சந்திரன் உச்சம் பெறுவது உங்களின் தினம் செய்யும் பணிகள் சிறப்பாகவும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். லாபஸ்தானத்தில் செவ்வாய், குருவும் சேர்ந்து இருப்பது தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள்.
 
ராசியில் சூரியன் அமர்ந்து ஏழாமிடத்து சனியை பார்வை இடுவது சப்தம பார்வையால் தந்தை மகனின் உறவு பாதிக்கும். காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து மறையும். சிலருக்கு வீட்டை விட்டு வந்து திருமணம் செய்ய முயற்சிகளை செய்வீர்கள். உங்களை மதிப்பவர்களை மதிப்பீர்கள். யாருக்கும் எதையும் சமாதானம் செய்து கொள்ளமாட்டீர்கள். தனஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து எட்டாமிடத்தை பார்வை இடுவதால் தொழிலில் சிலருக்கு கடன் பிரச்சனை பாதிப்பிலிருந்து விடுபட வாய்ப்புகள் இனி அமையும். தனாதிபதி ஆட்சி பெற்று புதனுடன் இணைவது பணபுழக்கம் அதிகரிக்கும். விருப்பபட்ட பொருட்களை வாங்குவீர்கள்.
 
ஆறாமிடத்தில் ராகு அமர்ந்து உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அனைத்து டெஸ்டிலும் எதுவும் இல்லை என்று சொன்ன பிறகு நமக்கு ஏதோ செய்கிறது என்று எண்ண தோன்றும். ஏழாமிட சனி வக்கிரம் பெறுவது கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும் நீண்ட நாள் நண்பரிடம் உரிமையோடு சில வார்த்தை சொல்ல அவர் உங்களிடம் வருத்தம் கொள்வார். 
 
பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் உச்சமாக இருப்பதால் செய்யும் தொழிலிலும் பார்க்கும் உத்தியோகத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். லாபஸ்தானத்தில் செவ்வாய் நீசம் பெற்று உச்ச குருவுடன் சேர்வதால் ஒரு மித்த கருத்துள்ள புதிய நண்பர்களின் உதவி கிடைக்க பெறுவீர்கள். நல்ல உள்ளங்களின் அன்பை பெறுவீர்கள். பிடிவாதமான குணங்களை விட்டு விட்டு எல்லோரிடமும் அன்புடன் பழகுவீர்கள். எதிலும் ஈடுபாடுடன் செய்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
பச்சை, வெண்மை, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென்மேற்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
புதன், வியாழன், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
25-10-2026 ஞாயிறு இரவு 08.01 முதல் 27-10-2026 செவ்வாய் இரவு 11.57 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வெற்றிலை மாலை போட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர வேண்டியவை விரைவில் நடக்கும்.