நலம் தரும் ஸ்ரீராமநாம மந்திரங்கள்!

நலம் தரும் ஸ்ரீராமநாம மந்திரங்கள்!

ராம த்ரயோதஜுக்ஷரி மந்திரம்

 
“ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்” - இந்த மந்திரம் பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்டது. ராம த்ரயோதஜுக்ஷரி மந்திரம் எனப்படும் இந்த மந்திரத்தை ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் தொடர்ந்து கூறி ஸ்ரீராமபிரானின் தரிசனம் பெற்றார்.
 
கலியுகத்தில் பாவம் நீக்கும் மந்திரம்
 
ஸ்ரீ ராம ராம ராமேதி ராமேராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
 
கலியுகத்தில் பாவம் நீக்கும் மந்திரமாக திகழ்வது இந்த ராமநாம மந்திரமாகும். இதனை ஒருமுறை சொன்னால் நூறு தடவை ராமநாமம் சொல்வதற்கு சமம். ஒரு முறை ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் செய்த பலனும் கிடைக்கும்.
 
ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும் மந்திரம்
 
ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும்.
 
ஸ்ரீராமம்ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்
 
சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்க ஒரு மந்திரம்
 
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
 
- தொகுப்பு காமாக்ஷி வெங்கட்