பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - தனுச

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - தனுச

சிந்தனையும், செயலையும் சிதறாமல் செயல்படுத்தும் தனுச ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குருவின் பார்வை படுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். எதை செய்தாலும் அதற்கு துணிச்சல் வேண்டும் அது உங்களிடம் நிறைய இருக்கும். தனக்கென கொள்கை வகுத்து செயல்படும். உங்களின் முயற்சி நன்மை பெற்று தரும். உங்களின் யோகாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பது இன்னும் சிறப்பான பலன் பெறச் செய்யும். செய்யும் தொழிலே தெய்வமாக கொண்டு செயல்படுவீர்கள். பண புழக்கம் தாராளமாக இருக்கும்.
 
ராசிநாதன் உங்களுக்கு பல வேறு விதமான நன்மைகளை பெற்று தருவார். எதையும் முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுவீர்கள். உங்களின் மனதில் தோன்றியதை உடனே செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். உங்களின் ராசிக்கு மூன்றில் சனி / ராகு அமர்வது எதையும் தைரியத்துடன் விடாமுயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர வைக்கும். சரியான நேரத்தில் செயல்பட்டு அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். முன் பின் தெரியாத நபர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டு நண்பர்களின் நட்பும், தொடர்பு பயனுள்ளதாக அமையும். அட்டமாதிபதி சந்திரன் ஆட்சி பெற்று இருப்பதால் யாருக்கும் ஜாமீன் போடுவது கூடாது. எதையும் யோசித்து செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பாராத வளர்ச்சிறை பெறுவீர்கள். புதிய கலை நிகழ்ச்சி உங்களை மேலோங்க செய்யும்.
 
தொழில் செய்து வருபவருக்கு செய்யும் தொழில் சற்று இனி முன்னேற்றம் உண்டாகும். அரசு பணியில் இருப்பவருக்கு தன் சீரிய பணியை செவ்வென செய்து பாராட்டு பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் தடுமாற்றம் நீங்கி, ஆற்றலுடன் செயல்படுவீர்கள். தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கு எதுவும் வராமல் பார்த்து கொள்ள வேண்டிமென்று எண்ணி செயல்படுவீர்கள்.
 
திருமண வாய்ப்புகள் அமையும். திடமான நம்பிக்கையை கொண்டு செயல்படுவீர்கள். குறித்த நேரத்தில் எல்லாவற்றையும் செய்து முடிப்பீர்கள். அரசியலில் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பார்த்து கவனமுடன் செயல்படுவீர்கள். ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொள்வீர்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை கேதுவால் அமைய பெறுவீர்கள். அதற்கான முயற்சி செய்தால் விரைவில் அமையும். விவசாயம் நல்ல விளைச்சல் பெறும். நல்ல ஆதாயமும் பெறுவீர்கள். பண புழக்கம் நன்றாக இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், சிவப்பு, பலவர்ணம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், ஞாயிறு, செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
31-01-2026 சனி இரவு 08.14 முதல் 02-02-2026 திங்கள் இரவு 12.32 மணி வரையும்.
28-02-2026 சனி அதிகாலை 04.10 முதல் 02-03-2026 திங்கள் காலை 08.18 மணி வரையும்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
திங்கள் கிழமைகளில் சிவன் தரிசனம் செய்து சிவ மந்திரம் சொல்லி வில்வ அர்ச்சனை செய்து வர  உங்களின் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும். அடிக்கடி பைரவர் வழிபாடு செய்து வருவது மனவலிமையை தரும்.