குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - கன்னி
சோதனைகளை சாதனையாக்கி தொடர்ந்து செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு குரு பகவான் நான்கு, ஏழாமிட அதிபதியாக இருந்து லாப ஸ்தானத்தில் வந்து அமர்வது மிக சிறப்பான நற்பலன்களை பெற்று தருவார். வரும் 26-05-2026 முதல் லாப ஸ்தானத்தில் இருந்து கொண்டு அவர் பார்க்குமிடம் சிறப்பாக அமையும். முயற்சி ஸ்தானத்தை பார்வை இடுவது எடுத்து வைத்த காரியம் சிறப்பாக அமையும். சொல் ஒன்று செயல் பல என்பது அமையும். பொருளாதாரம் சிறக்கும்.
உங்களின் ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தை குரு பார்வை இடுவது எடுத்த காரியத்தில் என்ன தடை வந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கீர்த்தி ஸ்தானம் என்பதால் வெற்றியின் இலக்காக அமையும். சொந்த காலில் நிற்க வேண்டுமென்று சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல காலமாக அமையும். யோகாதிபதி சனியை குரு பார்வை இடுவது உங்களுக்கு சிறப்பான நல்ல பலனை பெற்று தரும். குரு பார்க்கும் போது கேந்திராதிபதி திரிகோணதிபதியை பார்க்கும் போது சிறப்பான பலனை பெற்று தரும். காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். நீங்கள் இனி யாரையும் நம்ப மாட்டீர்கள். எதையும் பரிசுத்தமாக செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். மற்றவரை பற்றி கவலை கொள்ளமாட்டீர்கள்.
ஐந்தாமிடத்தை பார்வை இடுவது விருப்பமுடன் யாரைவது காதலித்து இருந்தால் அவருக்கும் விருப்பம் உள்ளதா என அறியும் காலமாக அமையும். பூர்வ புண்ணியஸ்தானம் என்பதால் முன் பிறவியின் விட்ட குறை தொட்ட குறை என்று இந்த பிறவிலும் தொடரும் காரியம் உங்களுக்கு உங்களின் வாழ்க்கை ஏற்கனவே நடந்தது போல தெரியும். கடந்த பிறவியையும் எதிர்காலத்தில் மறுபிறவியை பற்றி யோசிக்க செய்வது குரு என்பது பிருகு நந்தி ஜோதிடத்தில் சொல்லபடுகிறது. அதனை கொண்டு தொடர்புகளை குரு ஏற்படுத்தி கொடுப்பார். குல தெய்வம் தெரியாதவர் முயற்சி செய்தால் குல தெய்வத்தை அறிவீர்கள். அறிவியல் பூர்வமான சிந்தனைகளை அறிந்து கொள்வீர்கள். எதை செய்தால் பித்தம் தெளியும் என்பதை உணருவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்வீர்கள்.
20-10-2026 முதல் 22-12-2026 வரை குரு அதிசாரமாக சிம்மம் வரும்போது உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் அமர்வது புதிய செலவுகளை செய்ய வேண்டிவரும். இரு மாதம் சற்று கவனமாக செலவு செய்வதும் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பங்கு முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பதும் முடிவுகளை தெளிபடுத்தி சொல்வதிலும் திறமையானவராக இருப்பீர்கள். கணக்கு போட்டு காட்டுவதிலும் திறமையாளராக இருப்பீர்கள். இனி மீண்டும் வக்கிரமாகி கடத்திற்கு செல்லும் போது பழைய நிலையை அடைவீர்கள். சொன்னதை செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். பொது நலன் கருதி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சிறப்பாக அமையும். குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள். புத்திர புத்திரிகளின் எதிர்காலம் கருதி அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள். சாதனைகளை நிகழ்த்த தேவையான யுக்திகளை கையாளுவீர்கள். திடமான நம்பிக்கை கொண்டு செயல்படுவீர்கள். பொருளாதார வளர்ச்சி தன்னிறைவு பெறும்படியாக அமையும். கருத்து ஒற்றுமை உள்ளவர்களிடம் மட்டுமே தொடர்பு கொண்டு செயல்படுவீர்கள்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மூன்று நெய் தீபமேற்றி எலுமிச்சை சாதம் வைத்து வேண்டிக் கொள்ள சகலவித காரியமும் வெற்றியை தரும். சாதத்தை பக்தர்களுக்கு தானம் செய்து விட்டு வர வேண்டியது கிடைக்கும்.
















